கோப்புப் படம் 
இந்தியா

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள்.

DIN

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் மற்றும் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில் இருக்கும் அவசார் நிறுவனத்தில் சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் இருப்பதாகக் காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட சிறப்புப் படை மற்றும் சூரத் காவல்துறையினர் இணைந்து நேற்று (அக். 20) இரவு நடத்திய சோதனையில் அந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 14.10 லட்சம் மதிப்பிலான 141 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 427 கிலோ அளவிலான சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் தடயவியல் துறை சோதனைக்கு அனுப்பி ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த அக். 13 அன்று அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையில் குஜராத் மற்றும் தில்லி காவல்துறையினரால் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 500 கிலோ அளவிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் சில வாரங்களுக்கு முன்பு 562 கிலோ கொகைன் மற்றும் 40 கிலோ அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த அக். 10 அன்று 208 கிலோ கொகைனை ரமேஷ் நகரிலுள்ள கடையில் வைத்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இந்த போதைப் பொருள்கள் பார்மா சொல்யூசன்ஸ் எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் அங்கலேஷ்வர் தொழிற்பேட்டையிலுள்ள அவ்கார் மருந்து நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் குஜராத் போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT