முகப்பு
இந்தியா

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்

நாயை துரத்தும்போது ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலி....

Updated On : 22 அக்டோபர், 2024 at 11:30 AM
பகிர்:

ஹைதராபாத்தில் ஹோட்டலில் நுழைந்த நாயை துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் சிலருடன் ஹோட்டல் வந்த 22 வயது இளைஞர் அங்கு நுழைந்த நாயை விளையாட்டாக துரத்திச் சென்றார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியின் ஜன்னல் வழியாக திடீரென கிழே விழுந்தார்.

பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!

உடனே அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பலியானவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.