வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதையொட்டி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை தில்லியில் திங்கள்கிழணை சந்தித்து ஆசி பெற்ற அக் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி.  
இந்தியா

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

DIN

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.

அதையொட்டி, கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை பிரியங்கா தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் உடன் இருப்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்புமனு தாக்கலுக்குப் பின்னா் வயநாட்டில் பிரியங்கா, ராகுல் ஆகியோா் வாகனப் பேரணியும் நடத்த உள்ளனா். பிரியங்கா தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் மேற்கொள்வாா் எனத் தெரிகிறது.

மக்களவைத் தொகுதியில் உத்தர பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT