வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட அதிஷி 
இந்தியா

தில்லியில் மாசுக்குக் காரணம் பாஜகவின் மோசமான அரசியல்: அதிஷி

தில்லி மக்களுக்கு பாஜக தீங்கு விளைவிக்கும் அதேநேரத்தில்..

பிடிஐ

தலைநகரில் அதிகரித்துவரும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு பாஜகவின் மோசமான அரசியலே காரணம் என தில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டினார்.

வஜிராபாத் தடுப்பணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியது,

ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகளால் யமுனையில் அமோனியா அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக நீர் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த நில நாள்களாக தில்லியில் மாசு மோசமாகி வருகிறது. குறிப்பாக தீபாவளியின்போது யமுனை ஆற்றில் வெண்மை நுரை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யமுனையில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை அனுப்பும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசுகளின் திட்டமிட்ட செயல் என்றார்.

இதன் விளைவாக அமோனியா அளவு அதிகரித்து தண்ணீரைக் குடிக்க முடியாத அளவிற்கு ஆக்குகிறது. ஹரியாணாவிலிருந்து மாசடைந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகிறது. இதனால் குடியிருப்பாளர்களுக்கு சுத்தமான நீர் விநியோகத்தைப் பாதிக்கிறது. விஜிராபாத், சோனியா விஹார் மற்றும் பாகீரதி ஆகிய மூன்று சுத்திகரிப்பு நிலையங்களில் அமோனியா அளவு அதிகரித்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் பாஜகவின் மோசமான அரசியல் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தில்லி மக்களுக்கு பாஜக தீங்கு விளைவிக்கும் அதேநேரத்தில் அவர்களைப் பாதுகாக்கத் தனது அரசு பாடுபடுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2021 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பஞ்சாபில் மரக்கன்றுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், ஹரியாணாவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோகன்லால் - 367 திரைப்பட இயக்குநர் அறிவிப்பு!

ஆன்மிக தொடரில் அறிமுகமாகும் விஜய் - அஜித் பட நாயகி!

திமுக மகளிரணி மாநாடு தொடங்கியது!

யு19 உலகக் கோப்பை: பந்துவீச்சில் அசத்திய இங்கிலாந்து; 136 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

77வது குடியரசு நாள் விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT