மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயதான பெண் ஒருவர், திங்கள்கிழமை (அக். 21) நள்ளிரவில் சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில், அவரைக் கண்ட 20 வயதான இளைஞர், தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து, அந்த வழியாக ரோந்து சென்ற காவல்துறையினர், பெண்ணைக் கண்டதும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், அடையாளம் தெரியாத நபர் மீதான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கண்டறிந்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இதையும் படிக்க: கனடாவில் இந்திய சீக்கிய பெண் மர்ம மரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.