மீட்புக் குழுக்கள் Center-Center-Bangalore
இந்தியா

ஒடிசாவில் 288 மீட்புக் குழுக்கள்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்!

ஒடிசா கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

DIN

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை 'டானா' புயலாக வலுப்பெற்றதால், ஒடிசா கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.

மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

எனவே மாநில அரசு ஏற்கனவே 19 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள், 51 ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப்படை குழுக்கள் மற்றும் 178 தீயணைப்பு சேவைக் குழுக்களுடன், கூடுதலாக 40 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை இந்திய விமானப்படை 150 பேரிடர் மீட்புப்பணி பணியாளர்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை இரண்டு விமானங்களில் புவனேஸ்வருக்கு கொண்டு சென்றது. அங்குல், பூரி, நாயகர், கோர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், கியோஞ்சர், தேன்கனல், கஞ்சம் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் கடலோரப் பகுதியில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய இடங்களை கண்டறிந்து மக்களை வெளியேற்றும் நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது.

ஒடிசாவின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அனைத்து மீனவர்களும் கரைக்குத் திரும்பினர். புதன்கிழமை மாலைக்குள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்கவும், தங்குமிடம் முகாம்களுக்கு மாற்றவும் மக்களை வேண்டுகோள் விடுத்தார்.

முகாம்களில் உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான உணவு மற்றும் மகளிர் போலீசார் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம், மேலும் புயல் கரையை கடக்கும் முன் சுமார் 10 லட்சம் பேர் இடமாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT