இந்தியா

ஒடிஸா: டானா புயல் கரையை கடக்க தொடங்கியது!

சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை...

DIN

ஒடிஸாவில் ‘டானா’ புயல் இன்று(அக். 25) கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நள்ளிரவு 12.30 மணி நிலவரப்படி, ஒடிஸாவின் பாரதீப் பகுதிக்கு கிழக்கு-வடகிழக்கே 50 கி.மீ. தொலைவிலும், தாமரா பகுதிக்கு தெற்கு- தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கே 160 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ள டானா புயல் நிலப்பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிஸா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒடிஸாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே பிதர்காணிகா - தாமராவுகு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 - 4 மணி நேரத்துக்கு, மேற்கண்ட பகுதிகளில் அதிவேக சூறாவளிக் காற்று மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT