கோப்புப் படம் 
இந்தியா

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

காவல்துறையில் தெரிவித்தால் விடியோவை வெளியிடுவதாகவும் மிரட்டல்

DIN

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்பதியர் பைரவ பாபா கோயிலுக்கு அக். 21 ஆம் தேதியில் சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் மது அருந்தியிருந்த 8 பேர், சுற்றுலா சென்ற தம்பதியரைச் சுற்றி வளைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பெண்ணின் கணவரைப் பிடித்த கும்பலில் சிலர், அந்தப் பெண்ணை சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்;

அதுமட்டுமின்றி, அதனை விடியோவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை காவல்துறையினரிடம் தெரிவித்தால், விடியோவையும் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் புகார் எதுவும் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து அக். 23 ஆம் தேதியில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மற்றும் மகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT