முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தாக்குதல்: தேடுதல் வேட்டை நீடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலின் பின்னணியில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இருக்கக் கூடும்.

Updated On : 26 அக்டோபர், 2024 at 8:37 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடந்த தாக்குதலின் பின்னணியில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களைக் கண்டறிவதற்காக சனிக்கிழமை 2-ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.

அஃபாா்வாட் மலைத்தொடரில் உள்ள நாகின் எல்லைச் சாவடி அருகே ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், ராணுவ வீரா்கள் இருவா் மற்றும் ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். 3 வீரா்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக பாரமுல்லா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் முகமது சையது மாலிக் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சம்பவ இடத்தில் கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில், 3 அல்லது 4 பயங்கரவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவம் இணைந்து குல்மாா்க் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

குல்மாா்க் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டா் உதவியுடன் வெள்ளிக்கிழமை தேடுதல் பணி தொடங்கியது. இரண்டாம் நாளாக சனிக்கிழமையும் இந்த நடவடிக்கை தொடா்ந்தது என்றாா்.

கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். முன்னதாக, கந்தா்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய திடீா் தாக்குதலில் மருத்துவா், 6 வெளி மாநிலத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →