பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா என்சியை மும்பாதேவி தொகுதியின் வேட்பாளராக சிவசேனை அறிவித்த சில மணிநேரங்களிலேயே, சிவசேனையில் அவர் இணைந்தார்.
மகாராஷ்டிரத்தில் வரும் நவம்பர் 20 ஆம் தேதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷைனாவை, மும்பையின் மும்பாதேவி வேட்பாளராக சிவசேனை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் முன்னிலையில் சிவசேனையில் ஷைனா இணைந்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுடன் ஷைனா பேசியதாவது ``நான் என் வாழ்நாள் முழுவதும் தெற்கு மும்பையில் வசித்து வருகிறேன். இங்குள்ள மக்களின் அன்றாட சவால்களை என்னால் உணர முடிகிறது. மும்பை மக்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். நான் ஒரு எம்.எல்.ஏ.வாக இருக்க விரும்பவில்லை; நான் மக்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன்.
எனக்கு பொதுச்செயலாளர் இல்லை; ஆகையால், எனது அனைத்து அழைப்புகளுக்கும் நானே பதிலளிக்கிறேன். எனது குடிமக்களுக்கு நான் எப்போதும் பொறுப்புக் கூறக்கூடியவராக இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? கூட்டணியா? இபிஎஸ் பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.