மும்பை : நடிகர் சல்மான் கானிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததுடன், இல்லையெனில் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் இன்று (அக். 30) மும்பையில் கைது செய்துள்ளனர்.
சல்மான் கொலை செய்யப்படுவார் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து நேற்று(அக். 29) தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க வோர்லி பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியைச் சேர்ந்த ஆஸாம் முகமது முஷ்டஃபா என்பது தெரிய வந்துள்ள நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறையல்ல என்பதும், தொடர்ந்து பல மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.