கோப்புப்படம் 
இந்தியா

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக முன்னாள் எம்எல்ஏ மகன் கைது!

பிகாரில் மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை காணொலியாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வீட்டுக்கு வெளியே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமியை மறைமுக இடத்துக்கு கூட்டிச் சென்று நரேஷ் ராம் துரி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தையும் செல்போனில் விடியோ பதிவு செய்த குற்றவாளி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து, நரேஷ் ராமை கைது செய்த காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய கயா காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் பாரதி, விரைவில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏவின் மகன்

மறைந்த பாஜக எம்எல்ஏ காளிசரண் ராமின் மகனான நரேஷ் ராம், பாஜகவின் மாநில பொறுப்புகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கடந்த 2023ஆம் ஆண்டு கயா மாவட்டத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் நரேஷ் ராமை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT