யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உ.பி. அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடு ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு கடந்த ஆண்டில் வெளியிட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் தங்களுடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை 'மானவ் சம்பதா' என்ற அரசு இணையதளத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

சொத்து விவரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாது மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என அறிவித்திருந்தனர்.

மானவ் சம்பதா என்பது மனிதவள மேம்பாட்டுத் துறைக்காக அரசால் வடிவமைக்கப்பட்ட இணைய தளமாகும். இதன்மூலம் ஆள்சேர்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் போன்ற அரசின் மனிதவள மேலாண்மை குறித்த விவரங்கள் டிஜிட்டல் மயமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்கள் அவர்களின் விவரங்களை இதில் பதிவு செய்யாவிட்டால் அவர்கள் விடுப்பு எடுத்ததாகப் பதிவாகி அவர்களின் சம்பளத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. உ.பி.யில் மட்டும் 17.8 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ”சொத்து விவரங்களைப் பதிவு செய்யாத அரசு ஊழியர்களுக்கான காலக்கெடு ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது. இப்போது வரை 74 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்” என உ.பி. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஷிஷிர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT