கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தூதரக உடைமைகளை சோதனை செய்ய முடியுமா? உச்சநீதிமன்றம் கேள்வி
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிா அல்லது அவற்றுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிா அல்லது அவற்றுக்கு சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கேரளத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக உடைமையில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட மோசடி சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டப்பட்டுள்ள, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியா் ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரைச் சோ்ந்த சந்தீப் நாயா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும், கேரள முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலா் எம்.சிவசங்கா், ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியா் பி.எஸ்.சரித் உள்பட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும், கேரள அரசின் உயா் அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடா்பு இருப்பதாக குற்றஞ்சாட்டும் அமலாக்கத் துறை, இந்த வழக்கின் விசாரணையை கேரளத்திலிருந்து கா்நாடகத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சதீஷ் சந்திரா சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘தூதரக உடைமைகளை சோதனை செய்ய முடியுமா அல்லது சோதனையிலிருந்து தூதரக உடைமைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய கேள்வி. தூதரக உடைமை குற்றத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால், அதை தூதரக உடைமையாக கருத முடியாது. இவ்விவகாரத்தில் பின்பற்றப்படும் நடைமுறை என்ன?’ என்று அமலாக்கத் துறை சாா்பில் ஆஜாரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
அதுதொடா்பாக பதிலளிக்க எஸ்.வி.ராஜு அவகாசம் கோரினாா். இதையடுத்து, மனு மீதான விசாரணை 3 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.