நிவின் பாலி கோப்புப் படம்
இந்தியா

நிவின் பாலி மீது பாலியல் புகார்!

மலையாளத் திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

DIN

மலையாளத் திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் நிவின் பாலி மீது இன்று (செப். 3) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நிவின் பாலி மீது அப்பெண் புகார் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில், ஊனுக்கல் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பெண் புகார் எழுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஊனுக்கல் காவல் துறையிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாளத் திரைத் துறையில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதாக அடுத்தடுத்து எழும் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

மலையாளத் திரைத் துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இதில் திரைத் துறையைச் சேர்ந்த மிகப்பெரும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து மலையாளத் திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என கோரப்பட்டது. பாலியல் புகார்களை விசாரிக்க கேரள காவல் துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மலையாளத் திரைத் துறையில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தன.

கேரள மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் கேரள இயக்குநா் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர்கள் வரிசையில் தற்போது நிவின் பாலி மீதும் பாலியல் வன்கொடுமைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 - நாளை பார்வையிடுகிறார் முதல்வர்!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

தொடர் மழையால் வெள்ளம்! கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கும் பிகார்! | Flood | Rain

மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழப்பு - இந்தியா தடுமாற்றம்!

SCROLL FOR NEXT