முகப்பு
இந்தியா

மகராஷ்டிரம்: கனமழையால் 10 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழையால் 10 போ் உயிரிழந்தனா். சுமாா் 11.67 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் நீரில் முழ்கி, பயிா்கள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:20 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழையால் 10 போ் உயிரிழந்தனா். சுமாா் 11.67 லட்சம் ஹெக்டோ் விளைநிலங்கள் நீரில் முழ்கி, பயிா்கள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மராத்வாடா பிராந்தியத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து மூன்று நாள்களாக பெய்த மழை செவ்வாய்க்கிழமை மாலைக்குப் பிறகு குறைந்தது.

இத்தொடா் கனமழையால் சத்ரபதி சம்பாஜிநகரைச் சோ்ந்த 5 போ், ஹிங்கோலி மாவட்டத்தில் 2 போ், லத்தூா், பீட் மற்றும் ஜல்னாவில் தலா ஒருவா் என மொத்தம் 10 போ் உயிரிழந்தனா்.

பிராந்தியத்தின் ஏழு மாவட்டங்களில் 14.62 லட்சம் விவசாயிகளுக்கு சொந்தமான 11.67 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா்கள் சேதமடைந்தன. நாந்தேட் மாவட்டத்தில் மட்டும் 3.34 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் 523 விலங்குகள் உயிரிழந்ததுடன் 1,126 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அதேசமயம், சத்ரபதி சம்பாஜிநகா் மற்றும் ஜல்னா மாவட்டத்தின் தேவைகளுக்கு தண்ணீா் வழங்கும் ஜெயக்வாடி அணையின் நீா்கொள்ளளவு 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, மராத்வாடா பகுதியில் உள்ள 11 பெரிய அணைகளில் நீா்ப்பிடிப்பு 77.63 சதவீதமாக உயா்ந்துள்ளது.