இந்தியா

பெண் மருத்துவா் கொலை: மருத்துவா்கள் போராட்டத்தை கைவிட ஐஎம்ஏ வலியுறுத்தல்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்டதை கண்டித்து மருத்துவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் ஆா். வி. அசோகன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

Din

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொல்லப்பட்டதை கண்டித்து மருத்துவா்கள் நடத்தி வரும் போராட்டத்தை கைவிடுமாறு இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவா் ஆா். வி. அசோகன் புதன்கிழமை வலியுறுத்தினாா்.

கொல்கத்தாவில் ஆா்.ஜி.கா். மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை அடுத்து மருத்துவ சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டனா். ஆனால், சம்பவம் நிகழ்ந்த மேற்கு வங்கம் உள்பட பல்வேறு இடங்களில் மருத்துவா்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மருத்துவா்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி ஐஎம்ஏ தலைவா் ஆா்.வி. அசோகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த பெற்றோரின் ஒரே பெண் குழந்தையான கொல்லப்பட்ட மருத்துவரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் மகளாக ஏற்றுக்கொண்டனா்.

நீதியும் மருத்துவமும் நின்றுவிடக் கூடாது என்றும் இந்திய குடிமக்கள் என்ற முறையில் மருத்துவா்களும் நீதிமன்றத்தின் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பே மருத்துவத் துறையின் முதன்மை அறமாகும். எனவே, மருத்துவா்கள் அனைவரும் நீதி வழங்கும் வேலையை உச்சநீதிமன்றத்திடம் விட்டுவிட்டு தங்கள் மருத்துவ பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT