கோப்புப் படம் 
இந்தியா

மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தல்!

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்

DIN

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நோயாளிகள், பொதுமக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குனர்களுக்கு (டிஜிபி) மத்திய சுகாதாரத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை செப். 10ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கவும் குறிப்பிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

மருத்துவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து, மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT