மாதிரிப் படம் 
இந்தியா

ரீல்ஸ் விடியோ எடுக்கச் சென்ற பெண்! பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

ரீல்ஸ் விடியோ எடுக்கச் சென்ற பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி.

DIN

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் விடியோ எடுக்கச் சென்ற பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடியோ எடுப்பதற்காக புறநகருக்குச் சென்றபோது, இச்சம்பவம் நடந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 22 வயது இளம்பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட விடியோ எடுப்பதற்காக தனது நண்பருடன் புறநகருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு (செப். 3) சென்றுள்ளார். அங்கு இரு இளைஞர்கள் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் மல்ஹர்கஞ்ச் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் பெண்ணின் ஆண் நண்பருக்குத் தெரிந்தவர் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக விடியோ (ரீல்ஸ்) எடுக்கச் சென்ற ஆண் நண்பருக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளதா என காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

SCROLL FOR NEXT