பாஜகவில் இணைந்தார் ஜடேஜா
பாஜக உறுப்பினர் அட்டையை எக்ஸ் பக்கத்தில் பகிர்வு
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவுக்கான டி 20 உலகக் கோப்பை, கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாஜகவில் எம்.எல்.ஏ.வாக உள்ள நிலையில், ஜடேஜாவும் பாஜகவில் இணைந்துள்ளார். ரிவாபா, தனது எக்ஸ் பக்கத்தில் அவருடைய பாஜக உறுப்பினர் அட்டையையும், ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ரிவாபா ஜடேஜா 2019 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார்; மேலும் 2022 ஆம் ஆண்டில் ஜாம்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் கர்ஷன்பாய் கர்மூரால் தோற்கடிக்கப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.