சிங்கப்பூரில் பிரதமர் மோடி. PTI
இந்தியா

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்! மோடி அறிவிப்பு

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் தொடங்குவது பற்றி...

DIN

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று விருந்தளித்தார்.

தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையிலும், டிஜிட்டல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருத்துவம், கல்வி, திறன் மேம்பாடு, செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT