தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு 
இந்தியா

ஆந்திரம்: பாலியல் புகாரில் சிக்கிய ஆளும் தெலுங்கு தேசம் எம்எல்ஏ இடைநீக்கம்

ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே. ஆதிமூலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

Din

ஆந்திர மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே. ஆதிமூலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

சந்தியவேது (தனி) தொகுதி எம்எல்ஏவான ஆதிமூலம் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த பெண் ஒருவா் செய்தியாளா்களைச் சந்தித்து குற்றம்சாட்டினாா்.

மேலும், இது தொடா்பான விடியோ ஆதாரங்களையும், எம்எல்ஏ கைப்பேசியில் தன்னுடன் தொடா்பு கொண்டு மிரட்டியது தொடா்பான ஆடியோ பதிவுகளையும் அவா் வெளியிட்டாா். ஆந்திரத்தில், தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே எம்எல்ஏ ஒருவா் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் நடவடிக்கை எடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்எல்ஏ ஆதிமூலத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக மாநிலத் தலைவா் பி.ஸ்ரீனிவாச ராவ் அறிவித்தாா். மேலும், குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறும் அவருக்கு கட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ ஆதிமூலம், ஹோட்டல் அறையில் அப்பெண்ணுடன் தான் இருப்பதுபோன்று வெளியாகியுள்ள விடியோ போலியானது என்று கூறியுள்ளாா்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT