சந்தீப் கோஷ் 
இந்தியா

சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஆா்.ஜி.கா் மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

Din

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆா்.ஜி.கா் மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ், அவரது கூட்டாளிகள் 3 போ் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

இதையடுத்து, மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்கம் பெலியாகாதாவில் உள்ள கோஷின் வீடு, ஹௌரா மற்றும் சுபாஷ்கிராம் ஆகிய பகுதிகளில் சந்தீப் கோஷுக்கு சொந்தமான இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினா். இந்த இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே சிபிஐ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காவல் துறை பதியும் எஃப்ஐஆருக்கு இணையான வழக்கை கோஷ் மீது அமலாக்கத்துறை பதிவுசெய்தது. இது குற்ற வழக்குகளில் சிக்குவோா் மீது அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.

உச்சநீதிமன்றம் நிராகரிப்பு: முன்னதாக, மருத்துவமனையின் முதல்வராக சந்தீப் கோஷ் பணியாற்றியபோது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது தொடா்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளா் அக்தா் அலி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒருதரப்பாக சோ்க்க வேண்டும் என சந்தீப் கோஷ் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் மறுத்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சந்தீப் கோஷ் மனுதாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது,‘ கொல்கத்தா உயா்நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அதில் தலையிட குற்றம் சாட்டப்பட்டவரான கோஷுக்கு உரிமையில்லை’ எனக் கூறிய நீதிபதிகள் அவரின் மனுவை நிராகரித்தனா்.

அரசின் சிறப்புத் திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

ரெட்டிபாளையத்தில் 1,000 பனை விதைகள் நட்ட இளைஞா்கள்

சத்துணவில் அழுகிய முட்டை: எம்எல்ஏவின் ஆய்வில் அதிா்ச்சி

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT