முதல்வர் ரேவந்த் ரெட்டி-தீப்தி ஜீவன்ஜி. 
இந்தியா

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஒரு கோடி ரொக்கம் அறிவிப்பு

பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

DIN

பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிருக்கான 400 மீட்டர் (டி20) போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தார்.

அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஒரு கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அவருக்கு குரூப்-2 பிரிவில் பணி, வாரங்கலில் நிலமும் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர தீப்தி ஜீவன்ஜியின் பயிற்சியாளர் என் ரமேஷுக்கு ரூ.10 லட்சம் வழங்கிடவும் முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 6 தங்கம் உட்பட 27 பதக்கங்களுடன் 19வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரை வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - | MDMK | Mallai Sathya | Vaiko | Political Interview

பாமக எனது கட்சி, நான்தான் தலைவர்! அன்புமணி பொதுக்குழுவை கூட்டுவது சட்டவிரோதம்! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம்

இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்டை நேரில் கண்டுகளிக்கும் ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT