மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

பிரதமர் மோடியின் படுதோல்வி, மணிப்பூர் மன்னிக்காது: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் மோடியின் படுதோல்வி, மணிப்பூர் மன்னிக்காது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

PTI

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், முதல்வர் பிரென் சிங்கை உடனடியாக தகுதிநீக்கம் செய்துவிட்டு, மத்திய அரசு, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அவசர நிலைக்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு அமைக்கப்பட்ட மணிப்பூர் விசாரணை ஆணையம் அதன் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் படுதோல்வி இது என்றும், மணிப்பூர் எப்போதுமே மன்னிக்காது என்றும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்து, ஜிரிபம் மாவட்டத்தில் சனிக்கிழமை 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து காவல்துறை கூறுகையில், தீவிரவாதிகள், ஒரு வீட்டுக்குள் நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த நபரை சுட்டுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நடந்த வன்முறையில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிக இனவேறுபாடு நிறைந்து இருந்தாலும், ஜிரிபம் பகுதியில் முன்னதாக வன்முறைகள் ஏதும் நேரிடாமல் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம், 59 வயதான ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர், தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் படுதோல்வி இது, மணிப்பூர் எப்போதும் மன்னிக்காது. மணிப்பூர் மக்களின் குரலாக, முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கி தனது கருத்தை முன்வைத்துள்ளார். வன்முறைக்கு உள்ளாகி சிதைந்து போயிருக்கும் மணிப்பூர் மாநில மக்கள், மிகவும் கவலையோடு, அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை பிரதமர் மோடி வந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

கடந்த 16 மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு வினாடி கூட மணிப்பூருக்காக செலவிடவில்லை. மணிப்பூரில் வன்முறை வெடித்து மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது கூட அவர்கள் மணிப்பூருக்காக எதையும் செய்யவில்லை என்று கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதல்வர், தனது செயலற்ற தன்மையை வெட்கமின்றி வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார், மாநிலத்துக்கு ஒருங்கிணைந்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிப்பூர் பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை தற்போது மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், மாநில பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய ராணுவம் வைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே, மத்திய உள்துறை அமைச்சரும், மணிப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசியலமைப்புப் பொறுப்பை நிறைவேற்றத்தவறிவிட்டு, அரசியல் செய்வதிலும், பேரணிகளில் உரையாற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்று கார்கே குறிப்பிட்டுள்ளார்.

டிரோன்கள் மூலமும், ராக்கெட்கள் மூலமும் வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடங்கியிருக்கிறது, இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. இதற்கிடையே பாஜகவோ ராஜிநாமா நாடகத்தை அரங்கேற்றுகிறது, உடனடியாக மணிப்பூர் முதல்வர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT