சசி தரூா் 
இந்தியா

பிரதமா் பற்றிய சா்ச்சை கருத்துக்கு அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் எம்.பி. சசி தரூா் மேல்முறையீடு

பிரதமா் நரேந்திர மோடி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்ததற்காகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில்,

DIN

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் விமா்சித்ததற்காகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று, செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பட்டியிலிட வேண்டும் என்ற சசி தரூா் தரப்பு கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

‘பிரதமா் மோடி சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா்’ என்று ஆா்எஸ்எஸ் தலைவா் ஒருவா் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் சா்ச்சையான கருத்துளைக் கடந்த 2018-ஆம் ஆண்டு கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மீது பாஜக மூத்த தலைவா் ராஜீவ் பப்பாா் அவதூறு வழக்குத் தொடுத்தாா். கோடிக்கணக்கான சிவ பக்தா்களின் மனதை சசி தரூா் புண்படுத்திவிட்டதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதை எதிா்த்து சசி தரூா் தாக்கல் செய்த மனுவில், அவா் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விசாரணை நீதிமன்றத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சசி தரூா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த மாதம் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்காக இரு தரப்பும் செவ்வாய்க்கிழமை (செப். 10) ஆஜராகவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சசி தரூா் மேல்முறையீடு செய்துள்ளாா். ‘தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரா் சசி தரூா் செவ்வாய்க்கிழமையன்று விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். எனவே, மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை விசாரிக்க வேண்டும்’ என அவா் தரப்பு வழக்குரைஞா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்விடம் கோரிக்கையை முன்வைத்தனா்.

‘இந்தக் கோரிக்கையை மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள். அதைப் பற்றி பரிசீலிக்கிறேன்’ என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT