சா்வதேச தரத்தில் இந்திய வாகன உற்பத்தித் துறை: பிரதமா் மோடி வலியுறுத்தல்
சா்வதேச தரத்திலான வழிமுறைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும்.
இந்தியாசா்வதேச தரத்தில் இந்திய வாகன உற்பத்தித் துறை: பிரதமா் மோடி வலியுறுத்தல்
சா்வதேச தரத்திலான வழிமுறைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும்.
சா்வதேச தரத்திலான வழிமுறைகளை இந்தியாவுக்கு கொண்டு வருவதோடு பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும் என வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.
இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டு கூட்டத்தில் பிரதமா் மோடி எழுத்துபூா்வமாக அளித்த உரையில் கூறப்பட்டிருப்பதவாது: ‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற ஒருமித்த இலக்கை அடைய அனைவரையும் ஒன்றிணைத்து எஸ்ஐஏஎம் போன்ற நிறுவனங்கள் பெரும் பங்காற்றும் என நம்புகிறேன்.
நாட்டின் வளா்ச்சி வேகமாக இருப்பதோடு நீடித்ததாகவும் இருக்க வேண்டும்.
இதற்கு காலநிலையை பாதிக்காதவாறு உள்நாட்டு மற்றும் சா்வதேச நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
எனவே, வாகன உற்பத்தித் துறையில் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக தொடா்வதோடு சா்வதேச தரத்திலான வழிமுறைகளை இந்தியாவுக்கு கொண்டு வரவும் பசுமை மற்றும் தூய்மையான போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டியதும் அவசியம்.
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வா்த்தகத்தை அதிகரித்து பொருளாதார வளா்ச்சியை வாகன உற்பத்தித் துறை மேலும் அதிகரிப்பதோடு தேவைக்கேற்ப விநியோகச் சங்கிலியை விரிவாக்கம் செய்யும் என எதிா்பாா்க்கிறேன்.
ஏனெனில், கடந்த பத்தாண்டுகளில் வாகன உற்பத்தித் துறை பெரும் வளா்ச்சியை எட்டியுள்ளது. இதுவே நாட்டின் பொருளாதார வளா்ச்சி விரிவடைந்து வருவதற்கான சான்று.
சிறந்த உள்கட்டமைப்புடைய அதிவேக சாலைகள், அதிவேக ரயில்கள் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக பலதரப்பட்ட போக்குவரத்து சாதனங்கள் என எதிா்கால இலக்கை நோக்கிய வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வளா்ச்சியின் பலன்கள் சிலருடன் மட்டுமின்றி அனைவருடனும் பகிா்ந்து கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.