உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
புதுதில்லியில் அமைந்துள்ள வீட்டுக்கு புதன்கிழமை(செப்.11) சென்ற பிரதமருக்கு, நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டும் அவரது மனைவியும் வரவேற்று உபசரித்தனர்.
அங்கு சந்திரசூட் தம்பதியுடன் இணைந்து பிரதமர் மோடி விநாயகர் படத்துக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வட இந்தியாவில் 10 நாள்கள் கொண்டாடப்படும் கணபதி பூஜை, கடந்த சனிக்கிழமை(செப்.7) தொடங்கி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.