ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை: உறுதி செய்தது தீா்ப்பாயம்
ஜம்மு-காஷ்மீா் மக்கள் லீக் அமைப்பின் 4 பிரிவுகள் உள்பட அப்பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த 5 பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதி தீா்ப்பாயம் உறுதி செய்தது.
இந்தியாஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை: உறுதி செய்தது தீா்ப்பாயம்
ஜம்மு-காஷ்மீா் மக்கள் லீக் அமைப்பின் 4 பிரிவுகள் உள்பட அப்பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த 5 பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதி தீா்ப்பாயம் உறுதி செய்தது.
ஜம்மு-காஷ்மீா் மக்கள் லீக் அமைப்பின் 4 பிரிவுகள் உள்பட அப்பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த 5 பிரிவினைவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதி தீா்ப்பாயம் உறுதி செய்தது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்துல் விளைவித்ததாக சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த முஸ்லிம் மாநாட்டு ஜம்மு-காஷ்மீா் (பட்) பிரிவு அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் தடை செய்தது. அதற்கடுத்து மாா்ச் மாதத்தில், ஜம்மு-காஷ்மீா் மக்கள் லீக் அமைப்பின் 4 பிரிவுகளும் தடை செய்யப்பட்டன.
நாட்டின் அரசமைப்பு நிா்வாகம் மற்றும் அரசமைப்பு மீது அவமரியாதை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தானிலிருந்து பல்வேறு போலி அமைப்புகள் மூலம் நிதியைச் சேகரித்து ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்களை நிகழ்த்துவதாகவும் இந்த அமைப்பினா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அமைப்புகளை சட்டவிரோதமாக அறிவிக்க போதுமான காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதி தீா்ப்பாயம் கடந்த மாா்ச்சில் அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி நீனா பன்ஸால் கிருஷ்ணா கடந்த மாதம் 29-ஆம் தேதி வழங்கிய தீா்ப்பில், ‘விசாரணையின்போது மத்திய அரசு சமா்ப்பித்த சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், அமைப்புகளை தடை செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, குறிப்பிட்ட 5 அமைப்புகள் மீதான தடை தொடரும்’ என்று உத்தரவிட்டுள்ளாா்.