கன்றுக்குட்டியுடன் மோடி 
இந்தியா

பிரதமர் குடும்பத்தில் புதிதாக இணைந்திருக்கும் ஒருவர்.. தீபஜோதி!

பிரதமர் குடும்பத்தில் புதிதாக இணைந்திருக்கும் கன்றுக்கு தீபஜோதி என பெயர் சூட்டியுள்ளார் மோடி.

DIN

பிரதமரின் குடும்பத்தில் புதிதாக ஒருவர் இணைந்திருக்கார். அவருக்கு தீபஜோதி என பிரதமர் மோடி பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் புது தில்லி, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு புதிதாக கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது.

இந்த கன்றுக்கட்டியை பிரதமர் நரேந்திர மோடி தனது கையில் மிகவும் பாசத்துடன் வைத்து கொஞ்சி வரும் விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஒளியின் அடையாளமாக, இந்தக் கன்றுக்குட்டியின் நெற்றியில் ஒரு வெள்ளை திலகம் போன்ற அமைப்பு இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதனால், அந்த கன்றுக்குட்டிக்கு தீபஜோதி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விடியோவை பகிர்ந்து, பிரதமர் மோடி, தீப ஜோதி என பெயரிட்டதன் காரணத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும், பிரார்த்தனை மற்றும் அன்புடன் கன்றுக்குட்டியை அவர் வரவேற்கும் விடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

அதில், கன்றுக்குட்டியின் நெற்றியில், பிரதமர் மோடி முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தனது வீட்டுக்குள்ளும், தோட்டத்திலும், தீபஜோதியை கையில் ஏந்தியபடி செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

கனமழை எதிரொலி! சென்னை ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு!

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT