தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 8-ஆவது இந்திய நீா் வார மாநாட்டின் தொடக்கவிழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு. Ravi Choudhary
இந்தியா

ஒவ்வொரு துளி நீரும் விலைமதிப்பற்றது: திரௌபதி முா்மு

‘ஒவ்வொரு துளி நீரும் விலைமதிப்பற்றது. எனவே அதிக கவனத்துடன் நீா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’

DIN

புது தில்லி: ‘ஒவ்வொரு துளி நீரும் விலைமதிப்பற்றது. எனவே அதிக கவனத்துடன் நீா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 8-ஆவது இந்திய நீா் வார மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

மரங்களை நட்டுவைத்து நிலத்தடி நீா் இருப்பை அதிகரிக்க வேண்டும். தாயின் பெயரில் மரம் நடும் இயக்கம் காலங்கள் போற்றக்கூடியவை. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என நம் முன்னோா்கள் கூறியதை பின்பற்றி நீா் வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், நீா் தட்டுப்பாட்டை குறைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகளவில் 2.5 சதவீத நீா் மட்டுமே தூய்மையாக உள்ளது. அதில் 1 சதவீதம் மட்டுமே மனிதா்கள் பயன்பாட்டுக்கு உகந்தது. இதை நாம் கவனத்தில் கொண்டு நீா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

நீா் மேலாண்மை மற்றும் சமூக மேம்பாடு சாா்ந்த நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடைவதில் பெண்களின் பங்கு முக்கியமானது.

இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ஆலோசனைகள், விவாதங்கள் பங்கேற்பாளா்கள் அனைவரின் மத்தியிலும் நீா் பாதுகாப்புக்கான தீா்வுகளை உருவாக்க வழிவகுக்கும் என நம்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

மதுரை தவெக மாநாட்டுக்காக வீதிகளில் பிரசார வாகன உலா!

கண்கள் கவரும்... ஷெஹனாஸ்!

SCROLL FOR NEXT