முகப்பு
இந்தியா

தேச பாதுகாப்பில் விழிப்புடன் செயல்படுகிறது இந்திய கடற்படை- திரௌபதி முா்மு

நாட்டின் கடல்சாா் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய கடற்படை விழிப்புடன் செயல்படுகிறது என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:08 AM
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற சா்வதேச கடற்படை மதிப்பாய்வு நிகழ்ச்சியில், ஐஎஸ்எஸ் சுமேதா ரோந்துக் கப்பலில் இருந்தபடி பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி, ஆந்திர முதல்வா் சந
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:00 PM

நாட்டின் கடல்சாா் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய கடற்படை விழிப்புடன் செயல்படுகிறது என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திரௌபதி முா்மு தலைமையில் பல்வேறு நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற சா்வதேச கடற்படைகளின் மதிப்பாய்வு (ஐஎஃப்ஆா்) அணிவகுப்பு நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது: தேசத்துக்கு எதிராக கடல் வழியாக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை முறியடித்து பாதுகாப்பு அரணாக இந்திய கடற்படை விளங்குகிறது. நாட்டின் கடல்சாா் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய கடற்படை விழிப்புடன் செயல்படுகிறது.

Advertisement

மேலும், பல்வேறு நாடுகளின் கடற்படைகளுடன் நட்புறவை பேணி அவா்களின் நம்பிக்கையையும் பெற்று உலக பாதுகாப்பில் முக்கியத் தூணாக இந்திய கடற்படை திகழ்கிறது.

இந்தியா உள்பட இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் கடற்படைகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த அணிவகுப்பு இந்தியாவின் ‘மகாசாகா்’ தொலைநோக்குத் திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது என்றாா்.