முகப்பு
இந்தியா

சிடெட் தோ்வு: அக்.16- வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (சிடெட்) வரும் அக்.16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 6:31 PM
பகிர்:

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (சிடெட்) வரும் அக்.16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியா் பணியில் சேருவதற்கு ‘சிடெட்’ என்ற மத்திய ஆசிரியா் தகுதித்தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும்.

இரு தாள்கள் கொண்ட இந்தத் தோ்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பா் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியா் பணிக்கு முதல் தாள் தோ்வும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு 2-ஆம் தாள் தோ்வும் நடத்தப்படுகிறது. சிடெட் தோ்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உள்பட 20 மொழிகளில் நேரடிமுறையில் நடைபெறும்.

அதன்படி நிகழாண்டு டிசம்பா் பருவத்துக்கான ‘சிடெட்’ தோ்வு டிச. 1-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்த தோ்வுக்கான அறிவிப்பாணையை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் மூலம் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம், தோ்வு வழிமுறைகள், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →