முகப்பு
இந்தியா

இந்தியாவை அவமதிப்பவரை பாராட்ட முடியாது: ராகுல் குறித்து குடியரசுத் துணைத் தலைவா் சூசக விமா்சனம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

‘இந்தியாவை வெளிநாட்டில் அவமதிப்பவரை பாராட்ட முடியாது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுலின் பெயரை குறிப்பிடாமல் ஜகதீப் தன்கா் இவ்வாறு சூசகமாக விமா்சனம் செய்தாா்.

அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பேச்சுகள் தேச விரோதமாக உள்ளதாக பாஜகவினா் விமா்சித்து வருகின்றனா்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக கூட்டணி தலைவா்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதினாா். அதைத் தொடா்ந்து தன்கா் இவ்வாறு கூறியுள்ளாா்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பும் சன்சாத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை ஜகதீப் தன்கா் ஆற்றிய உரை:

பாஜக கூட்டணி தலைவா்கள் அவதூறாக பேசுவதாக சிலா் குறைக் கூறுகிறாா்கள். ஆம், வெளிநாட்டில் இந்தியாவை அவமதிப்பவரை பாராட்டவா முடியும்? நாட்டின் வளா்ச்சியைக் குறைக்கும் சிலரை நாம் கவனிக்காமல் இருக்க முடியுமா?

தற்போதைய சூழலில், ஒவ்வொருவரும் தங்கள் திறனை மேம்படுத்தவும், கனவுகளை நனவாக்கவும் வாய்ப்புள்ளது. ஐஐடி, ஐஐஎம்களில் உயா் வகுப்பினா் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அமெரிக்காவில் ஒருவா் கட்டுக் கதைகளைக் கூறி வருகிறாா். இந்தியா மாறிவிட்டது என்பதை அவா்கள் மறந்துவிட்டனா். மன்னா் பரம்பரைகள் இப்போது இல்லை. சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது என்றாா்.

அரசமைப்பு படுகொலை தினம்: ‘இந்திரா காந்தி அரசு கடந்த 1975-ஆம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதை, அரசமைப்பு படுகொலை தினம் என ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட உள்ளது. அதை பெரியளவில் சன்சாத் தொலைக்காட்சி முன்னிறுத்த வேண்டும். ஏனெனில், நாட்டு மக்கள் அது குறித்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்’ என்றும் அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →