ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுமி 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
புதன்கிழமை ஆழ்துளைக் கிணறு அமைந்திருக்கும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுமி நீரு குர்ஜார், எதிர்பாராத வகையில் 35 ஆடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
பந்திகுய் என்ற கிராமத்தில், புதன்கிழமை மாலை 5 மணிக்கு சிறுமி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 2 மணி வரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் என பல துறை வீரர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
இரவு முழுவதும் அவரை மீட்குப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மீட்புக் குழுவினர் பல்வேறு முறைகளில் சிறுமியை மீட்குப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.
சிறுமி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 31 அடிக்கு மீட்புக் குழுவினர் பள்ளம் தோண்டி, அங்கிருந்த, ஆழ்துளைக் கிணற்றுக்கு ஒரு குழாயை செலுத்தினர்.
இதற்கிடையே, குழந்தை பயப்படக் கூடாது என்பதற்காக, மைக் மூலம், குழந்தையின் தாய், ஆறுதலாகப் பேசிகொண்டேயிருந்தார். பிறகு, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் பெற்றோர் உள்ளிட்டோர் கண்ணீருடன் நின்றிருந்த நிலையில், சிறுமி உயிருடன் மீட்கப்பட்டதைப் பார்த்து அனைவரும் கூச்சலிட்டனர்.
ஒரு இரும்புக் கம்பியை உள்ளே செலுத்தி குழந்தையைப் பிடிக்கச் செய்து, கம்பியை மேலே இழுக்க முயன்றதும் பலனளிக்கவில்லை. பிறகு அருகில் பள்ளம் தோண்டிதான் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். பள்ளம் தோண்ட 12 மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.