காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 
இந்தியா

ராகுல்காந்தி மீது மூன்று வழக்குகள் பதிவு!

சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ராகுலன் மீது மூன்று வழக்குகள் பதிவு.

பிடிஐ

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் மீது மூன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு அவரின் உரையில், சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகவும், சீக்கிய சமூகத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி மீது சத்தீஸ்கரின் சில பகுதிகளிலிருந்து இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தலைநகர் ராய்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும், மற்றொன்று பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திலும் இரண்டு வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று துர்க் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

பாஜக தலைவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களிலும் ஆளுங்கட்சித் தலைவர்களால் இதுபோன்ற புகார்கள் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

SCROLL FOR NEXT