ஜெ.பி.நட்டா(கோப்புப்படம்) 
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை: ஜெ.பி.நட்டா

திருப்பதி லட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

DIN

திருப்பதி லட்டு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தில்லியில் மோடி அரசின் 100 நாள் சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி.நட்டாவிடம், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி விவரம் பெற்றுள்ளேன்.

திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க அனுமதி

மேலும் கிடைக்கக்கூடிய அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளேன். பின்னர் அதனை ஆய்வு செய்து இதுகுறித்து மாநில ஆட்சியாளர்களிடம் பேசி விசாரணை நடத்துவேன். உணவு பாதுகாப்பு தரத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, ​​அறிக்கை கேட்டுள்ளேன், கிடைத்தவுடன் அதை ஆய்வு செய்வோம் என்றார். திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT