வகுப்புக்கு செல்லாமல் ஆற்றுக்கு சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!
வகுப்புக்கு செல்லாமல் ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவர் நீரில் மூழ்கி பலி
வகுப்புக்கு செல்லாமல் ஆற்றில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் ஹர்ஷித் திவாரி என்ற மாணவர், தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹர்சித்தும் அவரது நண்பர்கள் ஐவரும் சேர்ந்து, புதன்கிழமையில் வகுப்புக்கு செல்லாமல், கட்டே காட் என்ற ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
ஆனால், ஆற்றுக்குள் சென்ற ஹர்சித், நீரில் சிக்கி மூழ்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஹர்சித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், ஹர்சித் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.