ஜம்மு-காஷ்மீர் கத்ரா பகுதியில் வாக்குப்பதிவு 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரம்!

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 54% வாக்குகள் பதிவாகியுள்ளன.

DIN

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்டத் தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி, 54% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் 2-வது கட்டமாக ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(செப்.25) காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்தலில் மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குச்சாவடிகளில் காவல் துறை, ஆயுதக் காவல்படை, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை சோ்ந்த அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டத் தேர்தல் செப். 18 ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் அக். 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT