இந்தியா

64 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

அவற்றில் 5 மருந்துகள் கலப்படம் மற்றும் போலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

மருந்து உற்பத்தி நிறுவனங்கள்- விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 64 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 5 மருந்துகள் கலப்படம் மற்றும் போலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஹிமாசல பிரதேசம், குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் ஆன்ட்டி பயோடிக், உயா் ரத்த அழுத்தம், காய்ச்சல், ரத்த உறைவு, சளித் தொற்று, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, கால்சியம் குறைபாடு, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 64 மருந்துகள் தரமற்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT