ஹிந்தி சினிமாவில் 1993இல் இருந்து நடித்துவருகிறார் சயிஃப் அலி கான். 70 படங்களுக்கு மேல் நடித்துள்ள சயிஃப் அலி கான் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளார்.
தற்போது, முதன்முதலாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். ஜுனியர் என்டிஆர் தனது 30வது படமான தேவரா படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதன் புரமோஷன் தொடர்பாக சயிஃப் அலி கான் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசினார். அதில் ராகுல் காந்தி குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில், சயிஃப் அலிகான் , ”எனக்கு தைரியமான, நேர்மையான அரசியல்வாதியைப் பிடிக்கும்” என்றார். அதற்கு நேர்காணல் செய்தவர் மோடி, ராகுல் காந்தி, கேஜரிவால் இவர்களில் யார் தைரியமனா அரசியல்வாதி எனக் கேள்வி கேட்பார்.
அந்தக் கேள்விக்கு சயிஃப் அலி கான், “அவர்கள் அனைவரும் தைரியமான அரசியல்வாதிதான். ஆனால், ராகுல் காந்தி நடந்துகொள்ளும் விதம் மிகவும் பிடித்துள்ளது.
ஒரு சமயத்தில் ராகுல் காந்தி செயலும் பேச்சும் விமர்சிக்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது தனது கடின உழைப்பினால் அதையெல்லாம் மாற்றியிருக்கிறார். ” என்றார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.