பாகிஸ்தானுக்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பணியின் முதல் செயலாளர் பாவிகா மங்களாநந்தன் 
இந்தியா

ஐ.நா.வில் ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தானுக்கு சில விளைவுகளை ஏற்படுத்தலாம்: ஐ.நா.வுக்கான இந்திய செயலர்

DIN

ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கையை சனிக்கிழமையில் விடுத்தது.

ஐ.நா. அவையின் 79 ஆவது அமர்வின் பொது விவாதத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தனது விவாதத்தை தொடர்ந்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா தனது பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்தி, கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பணியின் முதல் செயலாளர் பாவிகா மங்களாநந்தன், தனது பதில் உரையில் ``பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் நாடுகடந்த குற்றங்களுக்கு உலகளாவிய நற்பெயரைக் கொண்ட, ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைத் தாக்கும் தைரியத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதம், தவிர்க்க முடியாத சில விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

2001-ல் இந்திய மக்களவை, 2008-ல் இந்தியாவின் நிதி தலைநகர் மும்பை, சந்தைகள் மற்றும் யாத்திரை பாதைகளையும் பாகிஸ்தான் தாக்கியது. அத்தகைய நாடு, வன்முறையைப் பற்றி பேசுவது பாசாங்குத்தனமாகும்.

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு நீண்ட காலமாக விருந்தளித்த ஒரு நாடு இது. உலகெங்கிலும் உள்ள பல பயங்கரவாத சம்பவங்களில், பாகிஸ்தானின் கைரேகைகள் உள்ளன.

உண்மையை மேலும் பொய்களால் எதிர்கொள்ள பாகிஸ்தான் முயற்சிக்கும் என்பதை நாங்கள் அறிவோம்; மீண்டும் மீண்டும் செய்வதால் எதுவும் மாறாது. எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது; மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. பயங்கரவாதத்துடன் எந்த உடன்பாடும் எங்களுக்கு கிடையாது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

ஷாஹ்தராவில் ஒரு வீட்டில் சகமாரியான துப்பாக்கிச் சூடு: ரூய30 லட்சம் கொள்ளை

இளையான்குடி அருகே ஜாதி தலைவா்களின் பெயா்ப் பதாகைகள் வைப்பதில் மோதல்: 115 போ் மீது வழக்கு

மோத்தி நகரில் ஆண் சடலம் மீட்பு

தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து

SCROLL FOR NEXT