சஞ்சய் ரெளத் | கோப்புப் படம் 
இந்தியா

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை: சஞ்சய் ரெளத் விமர்சனம்

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை என்று சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.

DIN

பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை என்று சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜவின் வசூல் ஏஜென்ட் அமலாக்கத் துறை. பா.ஜ.க.வின் கணக்குகளுக்குச் சென்று சேரும் பணம், அமலாக்கத் துறை மூலம் செலுத்தப்படுகிறது. நிர்மலா சீதாராமன் சட்டவிரோதமாகப் பணம் குவித்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை அவருக்கு இந்தப் பணத்தை வசூலிக்க உதவியது.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை இந்த நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அமைப்புகள். இதற்கு யாரேனும் பொறுப்பு என்றால் அது பிரதமரும் நிதி அமைச்சரும்தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தோ்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது பெங்களூரு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

உ.பி. பயிற்சி மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை!

ஜனாதிகார சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் பத்திரங்கள் என்ற பெயரில் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமாக அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் தேசிய, மாநில அளவில் பாஜகவினா் பணம் பறித்துள்ளனா். எனவே, இதுதொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாா் மனுவின் அடிப்படையில் பெங்களூரு, திலக்நகா் போலீஸாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் ஆகியோா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) பதிவு செய்தனா்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120 பி, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT