இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்: 3-வது நாளாக சிறப்புக் குழு விசாரணை!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு 3-வது நாளாக ஆய்வு.

DIN

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு திருப்பதி கோயிலில் 3-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு போன்ற தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் போன்ற கலப்படங்கள் இருந்ததாக கூறும் ஆய்வறிக்கையை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது.

அதேநேரம், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, லட்டு கலப்படம் குறித்து விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

குண்டூா் சரக காவல்துறை ஐ.ஜி. சா்வசிரேஷ்ட திரிபாதி தலைமையிலான இக்குழுவில் விசாகப்பட்டினம் சரக டிஐஜி கோபிநாத், ஒய்எஸ்ஆா் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்வா்தன் ராஜு, திருப்பதி காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் வெங்கட ராவ், துணை கண்காணிப்பாளா்கள் சீதாராம ராவ், சிவநாராயண சுவாமி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா்.

இந்த குழு கடந்த சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கிய நிலையில் இன்று திருப்பதி கோயிலில் 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

திருப்பதி லட்டு தயாரிப்பில் கலக்கப்படும் பொருள்கள், அதன் விகிதம் குறித்த விவரங்களைப் பெற்றுளளது.

தொடர்ந்து இன்று திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் இல்லத்தில் இன்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு செய்திகள்:சில வரிகளில் 2.8.25

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

SCROLL FOR NEXT