புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வேலையல்ல என்றும் அவர் விளக்கம் கொடுத்திருப்பது, அடுத்த பிரதமர் வேட்பாளர் பெயர் பட்டியலில் யோகி ஆதித்யநாத் பெயரும் இடம்பெற்றிருந்ததே காரணம்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
மக்கள் உங்களை பிரதமராகப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னதற்கு, பாருங்கள், நான் இந்த மாநிலத்தின் முதல்வராக இருக்கிறேன், எனது கட்சி என்னை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக சேவையாற்றுமாறு இங்கே அமர்த்தியிருக்கிறது. ஆனால், அரசியல் எனது முழு நேர வேலையல்ல என்றும் பதிலளித்துள்ளார்.
தற்போது நான் முதல்வராக பணியாற்றுகிறேன், ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி, நான் இங்கே இருக்கும்வரை வேலை செய்வேன், இதனை செய்யவும் எனக்கென்று ஒரு நேரம் இருக்கிறது. அதுவரைதான் பணியாற்றுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக தலைமைக்கும் தனக்கும் எந்த கருத்துவேறுபாடும் ஏற்படவில்லை என்றும், நான் இப்போது இந்தப் பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணமே பாஜக தலைமைதான், அப்படியிருக்க எங்களுக்குள் எப்படி கருத்துவேறுபாடு ஏற்படும், அப்படி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க.. என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.