பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

பாங்காக்கில் மோடி!

இருநாள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்தார் மோடி.

DIN

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்து நாட்டுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார்.

பாங்காக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”பாங்காக்கில் தரையிறங்கினேன். அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதிலும், இந்தியா - தாய்லாந்து இடையேயான உறவை வலுப்படுத்துவதிலும் ஆவலுடன் இருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடி, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுகிறாா்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் இணைந்து கடல்சாா் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமா் மோடி இன்று மாலை கையொப்பமிடுகிறாா்.

மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உள்ளிட்டோரை பிரதமா் மோடி சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகவின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

பூக்கி... நித்யா மெனன்!

கடலோரக் கவிதைகள்... ரவீனா தாஹா!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT