PTI
இந்தியா

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் - நள்ளிரவில் வாக்கெடுப்பு

DIN

மாநிலங்களவையில் வியாழக்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று(ஏப். 4) அதிகாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, சுமாா் 12 மணி நேர விவாதத்துக்கு பிறகு புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில், மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் புதின்! ஆயுதப்படை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார் பிரதமர் மோடி!

ஹைதராபாதில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

AVM தோப்பில் நடப்பட்ட சிறு செடி நான்! AVM Saravanan-க்கு கமல் அஞ்சலி!

சிரிக்கும் தும்பைப் பூ.... கெளரி கிஷன்!

அவள் உலக அழகியே... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT