ENS
இந்தியா

தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!

ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம்.

DIN

ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டறிந்து திரும்பப் பெற, ரயில் மடாத் செயலி அல்லது உதவி மைய எண் 139-ஐ தொடர்புகொள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்துகின்றனர். தொலைந்த அல்லது திருடப்பட்ட செல்போன்களைத் தடுக்கவும் (Block), கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் வடிவமைக்கப்பட்ட சி.இ.ஐ.ஆர். (CEIR) தளத்தை, இழந்த தொலைபேசிகளை மீட்டெடுக்கவும், சட்டவிரோதமாக வைத்திருப்பதையும் மறுவிற்பனை செய்வதையும் தடுக்கவும் பயன்படுத்தலாம்.

தொலைந்துபோன செல்போன்கள் குறித்து, இந்தத் தளத்தில் புகாரளித்தால், செல்போனின் ஐஎம்இஐ எண்ணை சைபர் காவல்துறை தடுத்து நிறுத்தும்.

மேலும், தொலைந்துபோன செல்போனில் புதிய சிம் கார்டுடன் பயன்படுத்துவது தெரிய வந்தால், அதனை உரியவரிடம் ஒப்படைக்குமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்படுவர்.

ஒருவேளை, ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தால், வழக்குப்பதிவு செய்து, மாவட்ட காவல்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, செல்போனின் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அதன் உரிமையாளர் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT