கோப்புப்படம்.  
இந்தியா

பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு

கடந்த 2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1280.35 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

DIN

கடந்த 2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1280.35 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை வழங்கிட சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிருத்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ்!

2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT