ரோலர் கோஸ்டர் கோப்புப் படம்
இந்தியா

ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி!

தில்லியில் ரோலர் கோஸ்டரில் பயணித்த இளம்பெண் பலியானது பற்றி.

DIN

தில்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலியானார்.

தில்லியின் தென்மேற்கில் உள்ள கபஷேரா பகுதியில் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவுக்கு கடந்த வியாழனன்று தனது நண்பருடன் சென்ற பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண் ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளார்.

அப்போது, அவர் ரோலர் கோஸ்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால், அவரது உடலில் காதுகள், மூக்கு, கால்கள், கைகள் என பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

அவரின் நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இயந்திரங்களை அலட்சியமாக இயக்குதல், அலட்சியமான நடத்தையால் மரணம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் பொழுதுபோக்கு பூங்கா மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் கபஷேரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT